ஏழை எளிய மக்கள் கோவில் தெருக்களில் நடமாட நடத்தப்பட்ட போராட்டத்தில் தமிழர், மலையாளிகள் செய்த பங்களிப்புகளை பதிவு செய்திருக்கும் நுால். கள ஆய்வு செய்து செய்திகளை திரட்டி ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் மன்னராட்சியின்போது நடைமுறையில் இருந்த உரிமை மீறல்களையும், கொடிய தண்டனைகளையும் எதிர்த்து நடத்திய போராட்ட நிகழ்வுகள் நிரல்பட வைக்கின்றன. நாராயண குருவின் அர்ப்பணிப்பு மனதை நெகிழ வைக்கிறது.
போராட்டத்தில் பங்களித்த தலைவர்களை அறிய வைக்கிறது. சிறை சென்றவர்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன. ஆய்வு நோக்கில் படிக்க வேண்டிய நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு