தகவல் அறியும் உரிமை சட்டம் உருவான பின்னணியை விவரிக்கும் நுால். இதற்காக நடத்தப்பட்ட இயக்கத்தின் செயல்பாடுகளை கால வரிசைப்படி அறியத் தருகிறது.
இந்த புத்தகம், 31 கட்டுரைகளை உடையது. இதற்கான இயக்கத்தின் துவக்கப்புள்ளியாக இருந்த தேவ்துங்ரி கிராமத்து நிகழ்வுகள் விரிவாக உள்ளன. தொடர்ந்து நடந்த நிலப் போராட்டத்தின் போது, தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கான கருத்து உருவானதை தெளிவுபடுத்துகிறது.
இந்த சட்டம் உருவாவதற்கான கருத்து வலுப்பெற உந்து சக்தியாக இயங்கியோரின் செயல்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தி வரும் சட்ட அமலாக்கத்தில் வரலாற்று முக்கியத்துவத்தை குறிப்பிடும் நுால்.
– ஒளி