கைவினை பொருட்கள் தயாரிப்போர் வாழ்வை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட நாவல். நிலமும், களமும் தொழில்சார் விவரணைகளும் நம்பகத்தன்மையுடன் உள்ளன.
பதின்ம வயதில் உண்டாகும் மோதலுக்குப் பின், பாதையைத் தேர்ந்தெடுத்து நகர்கின்றனர். சிறு மோதலின் விளைவுகளே வினையாகி திசை திருப்பும் அவலத்தைக் காட்டுகிறது. கதாபாத்திரங்கள் மனதை நிறைத்து நிற்கின்றன.
ஆண்கள் தடுமாறி, மனம் சிதறும் தருணங்களும், அதே சூழலை சந்திக்கும் பெண்கள் உறுதியான முடிவு எடுப்பதுச் சொல்லப்பட்டுள்ளது. அன்பே வாழ்வின் ஆதாரம் என்று உணர்த்தும் இடம் கவனிக்க வைக்கிறது.
தனித்திறன்களுக்கு மாற்றாக, கருவியால் நிரப்பும் போது அழிவது வாழ்வு மட்டுமல்ல, மரபு அறிவும் திறனும் என்ற அடிநாதம் உடைய நாவல்.
– ஊஞ்சல் பிரபு