வாழ்க்கையில் கசப்பு நேரும்போது, அவற்றை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்ற யதார்த்த நிலையை மனதில் கொண்டு இயற்றப்பட்டுள்ள நுால்.
நற்பழக்கங்களுடன் நல்ல பணியில் வாழ்க்கைப் பயணத்தை தொடர்வதை உறுதி செய்கிறது.
இதை இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. அலுவலக டென்ஷனை பொறுத்துக் கொள்ள முடியாத இளைஞர்கள் இக்காலத்தில் அதிகம். உயரதிகாரி ஒரு வார்த்தை சொல்லி விட்டால் போதும், அடுத்த நிமிடமே ராஜினாமா கடிதத்துடன் போய் நிற்பர். இவர்களுக்கு படிப்பினை தரும். அவசரப்பட்டு எடுக்கும் முடிவு பாதிப்பை தரும் என்பதை உணர்த்தும் நுால்.
– தி.செல்லப்பா