கவிஞர் பாடல்களை எடுத்து, காலத்துக்கு ஏற்றவாறு கருத்து சொல்லும் நுால்.
காரைக்கால் அம்மையார், ‘கைக்கு அழகு தானமும் தர்மமும் செய்தல்’ என்கிறார். அவ்வையார், ‘அரிது அரிது மானிடராதல் அரிது’ என்று கருத்துரைக்கிறார். கவிஞர் கண்ணதாசன், ‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்று கற்றுத் தருகிறார்.
இப்படி நல்ல கருத்துகள் எடுத்தாளப்பட்டுள்ளன. மற்றொன்று, கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை, மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம், மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள் என அற்புதமாக தெரிவிக்கிறது. பாரதியார் பாடிய, ‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை’ என்ற பாடல் கருத்தும் உள்ளது.
– சீத்தலைச்சாத்தன்