மனமும் உடலும் ரணப்பட்டு கிடக்கும் போது ஏங்குற மனதுக்கு, கதை சொன்னால் பிடிக்கும். அதை சிவா செய்து கொண்டிருக்கிறான். உதறித் தள்ளிய காதலி குண்டடிபட்டுக் கிடக்கும் போதும் பாதுகாக்க முடிகிறதென்றால் அதுதானே பக்தி. இதுவும் ஆத்திகம் பேசுகிற அன்புதான்.
இந்த காதல் சொல்லிக்குள் இருக்கும் கதைசொல்லியை ரசிக்க முடியும். அன்புதானே கடவுள். தட்டை வீசியெறியும் கதாநாயகியை கோபமாக சீண்டாமல் அன்பாக அரவணைப்பது தானே கடவுள். தடகள ரேஸில் சாதனை படைத்த உசேன் போல்ட்டை போல, இந்த புத்தகமும் விறுவிறுப்பு குறையாது. புத்தகத்தை எடுத்ததும் தெரியாது... முடித்ததும் தெரியாது. அப்படி ஒரு மாஜிக்.
–- எம்.எம்.ஜெ.,