அறுபதுக்கும் அதிகமான சிறுகதைகளின் தொகுப்பு நால். சின்னஞ்சிறு கதைகள், சீரிய கதைகள். ஆற்றுநீர் போல் அருமையாகச் செல்கின்ற நடை. ஒரே மூச்சில், ஆர்வமுடன் படிக்கத் துாண்டும் வகையில் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையின் முடிவிலும் ஒரு செய்தி இருக்கிறது.
வெயிலின் அருமை கதையில் மாமியார், மருமகள் மன ஓட்டத்தை துல்லியமாய் பிரதிபலிக்கிறது. அதிரடி வைத்தியம் தந்து மாமியாரை திருத்துகிறாள் புத்திசாலி மருமகள். வீட்டு ராசி சிறுகதை, இடம், பொருள், ஏவல் பற்றி மனோதத்துவ ரீதியில் எடுத்துரைக்கிறது. லோன் சிறுகதை, பொறுப்புள்ள தகப்பனின் கடமை உணர்வை புத்திசாலித்தனமாய் சொல்கிறது. மூடநம்பிக்கைக்கு சவுக்கடி தருகிறது.
– டாக்டர் கார்முகிலோன்