இயந்திர உலகில் பிரச்னைகளுடனான வாழ்வில், மன மலர்ச்சியை தரும் வகையிலான நுால். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என வகையாக சொல்கிறது.
சாமியும் ஆசாமியும், ஆன்மிக நகைச்சுவை போன்ற, 75 தலைப்புகளில் சிரிப்பு வெடித்து சிதறுகிறது. பதற்றச் சூழலை குறைக்கிறது. ‘கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்; அவன் கடன் என்ற கடலில் மூழ்க வேண்டும்’ என்பது போன்ற உரையாடல்கள் கலக்குகின்றன. மன அழுத்தம் போக்கும் மாமருந்தாக மலர்ந்துள்ள நுால்.