சமையல்காரர் குடும்பத்தை மையப்படுத்தி புனையப்பட்ட புதினத்தின் ஆங்கில வடிவம்.
புகையிலை வணிகத்தால் சமையல்காரர் குடும்பம் செல்வத்தில் உயர்கிறது. அரசூர் ஜமீன் அரசர் இதனால் பொறாமை கொள்கிறார். இரண்டு குடும்பங்களுக்கும் ஏற்படும் பகைமையால் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இது எதை நோக்கி செல்கிறது என்ற ஆர்வமே ஆழ்ந்த வாசிப்புக்கு துணை செய்கிறது.
உண்மை நிகழ்வுகள், கற்பனையைக் காட்டிலும் விசித்திரமாக அமைவதைக் காட்டுகிறது. பழமை வாழ்க்கை எச்சங்களில் எதிர்கால தடயங்கள் இருக்கும் விந்தையான சூழல், கதையமைப்புக்கு வலு சேர்க்கிறது.
காட்சி அமைப்பால் விறுவிறுப்பான நடையில் அமைந்த நாவல்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு