சிறுவரை கவரும் வகையில் உளவியல் ரீதியாக படைக்கப்பட்டுள்ள நாவல்.
விலங்குகளை கதாபாத்திரமாக்கி, மனிதனுக்கு நல்லெண்ணம் போதிக்கிறது. கிளி இறக்கையை வெட்டியதால், இரைதேட முடியாமல், அணில் சேர்த்ததை திருடுகிறது. மன்னித்து, பிறர் உயிர்களுக்கு உதவும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது அணில். சிங்கக்குட்டிக்கு பிறந்தநாள் கதையில், அனைத்து விலங்குகளும் காட்டை சுத்தப்படுத்தி தயார் செய்வது ரசிக்க வைக்கிறது.
குரங்கு திருடிச் சென்ற கிளிக்குஞ்சை, பருந்தின் உதவியால் மீட்கும் தாய்க்கிளியின் பாசத்தை சொல்கிறது. மனிதர்கள் காட்டை அபகரித்ததை, யானைக்கூட்டம் எச்சரிக்கை செய்வது சிந்திக்க வைக்கிறது. குழந்தைகளுக்காக, பெற்றோர், ஆசிரியர்கள் வாசிக்க வேண்டிய நுால்.
– டி.எஸ்.ராயன்