குடும்பத்தில் கருத்து வேறுபாடு, முதியோரை புறந்தள்ளுதல் போன்ற பிரச்னைகளால் பிச்சை எடுத்து வாழ்வோரை விவரிக்கும் நாவல் நுால்.
யாசகத்தில் வாழ்வோர் படும் துன்பமும், அவலமும், எதிர்கொள்ளும் பிரச்னைகளும் நெஞ்சை நெகிழ வைக்கும் வகையில் விவரிக்கப்பட்டுள்ளன. உதவும் பண்பு, மத நல்லிணக்கம் பற்றி பேசப்பட்டுள்ளது. ஏழ்மைக்கு இரங்குதல் பண்பை இளைஞருக்கு ஊட்டி வளர்க்கிறது.