இலக்கை வகுத்து அடைவது குறித்து எடுத்துக் காட்டும் நுால். எது இலக்கு, எப்படி வகுப்பது, வகுத்ததை அடையும் வழி என தெளிவாகவும், விரிவாகவும் தக்க எடுத்துக்காட்டுகளோடும் விவரிக்கிறது.
இடர்ப்பாடுகளை கையாளும் விதத்தை காட்டுகிறது. விட்டுத்தர வேண்டியதையும், மன உறுதி கொள்ள வேண்டியதையும் கூறுகிறது. இவற்றால் விளைந்த வெற்றி, வரலாற்று நிகழ்வுகள் விவரிக்கப்பட்டுள்ளன.
அண்டார்டிகாவை ஆய்வு செய்யச் சென்றவர், உடன் பயணித்தோரை காப்பாற்றிய விதம், தாய்லாந்து குகையில் சிக்கியவர்களை மீட்டது, நாஜி முகாமில் சிக்கிய மருத்துவர் துயரை கடந்து வந்ததை விவரிக்கிறது. எதுவும் சாத்தியமே என்ற நம்பிக்கையை விதைக்கிறது. சவால்களை எதிர்கொள்ளக்கூடிய தைரியத்தை தரும் நுால்.
– ஊஞ்சல் பிரபு