புரிதல் இன்றி இளைஞர்கள் மணவாழ்வை முறித்துக் கொள்வதை மையப்படுத்தி எழுதியுள்ள நாவல். புரிந்து வாழ வேண்டியதன் அவசியம் மிகத் தெளிவாக கதாபாத்திரங்கள் வழியாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
வாழ்க்கையில் சரியான புரிதல் இல்லாவிட்டால், சிறிய தவறுகள் பூதாகரமாக்கப்பட்டு விடும். அது பெரும் பிளவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் புரிய வைக்கின்றன. கதாநாயகனும், நாயகியும் மனம் விட்டு பேசியிருந்தால் புரிதல் ஏற்பட்டிருக்கும். பிரிவு துயர் மறைந்துஇருக்கும் என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறது.
அகங்காரம் கொள்வதால் வரும் சிதைவுகளை சுட்டிக்காட்டுகிறது. புரிதல் இல்லையேல் பிரிதல்தான் மிஞ்சும் என உணர்த்துகிறது. வாழ்க்கைப் பாடத்தை கற்றுக்கொடுக்கும் நாவல்.
– ராம்