சட்டத்துணையோடு பெண்கள் முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் நுால்.
மனைவி வீட்டில் செய்யும் பணியின் மதிப்பை, விபத்து மரண வழக்கு வாயிலாக தீர்வு கூறுகிறது. விபத்தில் கால்கள் துண்டித்தபின், டியூசன் டீச்சராக பணிபுரிந்த பெண்ணுக்கு கிடைத்த நிவாரணத்தை பகிர்கிறது. பாலியல் பலாத்காரத்தால் பலியானவர் வாக்குமூலம் நெஞ்சை உலுக்குகிறது.
திருமண உறவால் பிறக்காத குழந்தை, சட்ட விரோதமா என விவாதிக்கிறது. மறுமணம் செய்யத் துடிக்கும் கணவர்களின் சூட்சுமத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. வாடகைத்தாய் முறை வரமா, சாபமா என கேட்கிறது. விவாகரத்து மனு மறுபரிசீலனை மனங்கள் மீண்டும் சேர வாய்ப்பு என்கிறது. தீர்ப்புகள் வழியாக நம்பிக்கை ஏற்படுத்தும் நுால்.
– டி.எஸ்.ராயன்