அங்க லட்சண சாஸ்திர பலனும் பரிகார விளக்கமும் வழிபாட்டு முறைகளும் விரிவாகவும் தெளிவாகவும் உரைக்கப்பட்டுள்ள நுால். உடலிலே ராசிகளும் கிரகங்களும் எப்படி தொடர்பு கொண்டு உள்ளன என்று விவரிக்கப்பட்டுள்ளது.
உடல் எப்படி வாத, பித்த, சிலேத்தும நாடியால் தீர்மானிக்கப்படுகிறது என்பதை அழகுற விளக்கியுள்ளது. தலை முதல் கால் வரை உடலின் ஒவ்வொரு அங்கத்திற்கும் அமைப்பு முறை அடிப்படையில் பலாபலன்களை தெளிவாக்குகிறது. அங்கங்களின் குறைகளை தீர்க்கும் தீர்வு அட்டவணை பயனுள்ள ஒன்றாகும். நாடியை கண்டறிய ஆலோசனை தரப்பட்டுள்ளது. சாதாரணமாக நினைக்கிற தோற்றத்திலே இத்தனை விஷயங்கள் உள்ளதா என்று பிரமிக்க வைக்கிறது.
– டாக்டர் கார்முகிலோன்