அலைபேசி என்ற நவீன தகவல் தொடர்பு சாதனம் குறித்து அலசலுடன் தகவல்களை தரும் நுால். இந்த கருவி கண்டுபிடிப்பு முதல் அது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் வரை ஆராய்ந்து கருத்துக்களை பகிர்ந்துள்ளது.
புத்தகம், 15 தலைப்புகளாக தொகுத்து தகவல்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளன. அறிவியல், தொழில் நுட்பத்தில் நிகழும் கண்டுபிடிப்புகள் பற்றி முதலில் பேசுகிறது. தொடர்ந்து அலைபேசி கருவி வருகைக்கு முன், பின் நிலைமையை ஆராய்கிறது.
அலைபேசி கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் குறித்து தனியாக விபரங்கள் தரப்பட்டுள்ளன. இந்த கருவியை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல், மன பாதிப்புகள் பற்றிய திரட்டும் உள்ளது. கருவியை பயன்படுத்தும் வழிமுறை, அரசின் செயல்பாடுகளை உள்ளடக்கி அறிவூட்டும் நுால்.
– ஒளி