மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
யானையின் உளவியலை, ‘காப்பான்’ கதை உணர வைக்கிறது. அலைபேசி, கணினி உழைப்பு, நேரத்தை குறைத்தாலும், உறவு இடைவெளி அதிகரித்ததை காட்டுகிறது.
அரசியல் பழிவாங்கல் ஏற்படும் விளைவை, ‘பலிகடா’ கதை எடுத்துரைக்கிறது. கள்ளம் கபடம் இல்லாத செயல்பாடுகளை, ‘வெள்ளைச்சாமி’ கதை மனதை ஈரமாக்குகிறது.
ஜாதிய ஒடுக்குமுறை விளைவாக ஏற்படும் பெண் அடிமைத்தனம், பாலியல் சீண்டலை, ‘தாயம்மா’ கதை, அதிகார வர்க்கம் மீது ஆவேசப்பட வைக்கிறது. ஒவ்வொன்றும் வலி, வேதனை, கடமையை மனசாட்சியுடன் உலுக்கி சொல்கிறது.
– டி.எஸ்.ராயன்