இரண்டாம் உலகப்போர் காலத்து கதையை உள்ளடக்கி புனைந்துள்ள நாவல்.
உலகப் போர்ச்சூழலில் கூட்டுக் குடும்பத்தின் வழித்தோன்றலான ராமோஜி, வார்டன் வேலையில் சேர்வதற்கு போவதில் துவங்குகிறது. உத்தரவு வராத நிலையிலே வேலையின் தன்மை பற்றி மனைவியிடம் பெருமிதமாக விவரிப்பதும், வேலையில் சேர ஆயத்தமாவதும் நகைச்சுவை. அக்காலக் குடும்பம், சமூக வெளியில் நிகழ்ந்த இயல்பான விவரிப்புகள் கடந்து செல்கின்றன.
சராசரி குடும்ப மகிழ்ச்சி, எக்களிப்பு, இடையூறு, வலி, வருத்தம், சிக்கல் என வாழ்க்கை ஓடுகிறது. உலகப்போர் வரலாற்று தகவல்களை பதிவு செய்துள்ளது. மதராஸ் பட்டணத்தைப் பயமுறுத்தும் போர் அறிவிப்பும், மக்கள் வெளியேற்றமும் அசைய வைக்கின்றன. விறுவிறுப்பான கதையோட்டம் உடைய நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு