பிரபலங்களை புகைப்படம் எடுத்த அனுபவத்தை சுவாரசியமாக பதிவு செய்துள்ள நுால்.
இலக்கியம், இசை, ஓவியக் கலைகளில் சிறப்பிடம் பெற்ற பிரமுகர்களை, புகைப்படம் எடுத்தபோது கிடைத்த அனுபவத்தை இயல்பு மாறாமல் தருகிறது. வித்தியாச கோணங்களில் எடுத்த படங்களும் பதிவாகியுள்ளன. புகைப்படம் எடுக்கும் போது பின்பற்ற வேண்டிய அர்ப்பணிப்பு, தீவிரத்தன்மை, நுட்பச் செயல்பாடுகளை கற்றுத் தருகிறது.
கலைஞர்களை, சூழலுடன் இணைத்து அழகின் நேர்த்தியை வெளிப்படுத்துகிறது. நேரப் பயன்பாடு, ஒளியில் வண்ணங்களை குழைக்கும் வித்தைகள் நுட்பங்களாக வெளிப்பட்டுள்ளன. கலைஞர்களை அணுகுவதற்கு தேவையான உள்ளரீதியான பிணைப்பு, பொறுமையின் அவசியத்தை சொல்கிறது. காலவெளியில் செதுக்கப்பட்டுள்ள ஒளி ஓவியமாக மலர்ந்துள்ள நுால்.
– மதி