அமெரிக்கா, உலகத்தையே மிரட்டும் வல்லரசாக உருவெடுத்துள்ளது குறித்த தகவல்கள் அடங்கிய நுால். உலகின் பல்வேறு நாட்டினர் இங்கு வந்து குடியேறியதால் உருவானது விளக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் அடிமையாக இருந்து மீட்ட வரலாற்றுச் செய்திகளில் தெளிவு தெரிகிறது. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க பங்கு பற்றிய செய்திகளும் பகிரப்பட்டுள்ளன. அடிமைகள் விடுதலைக்கு குரல் கொடுத்த ஆபிரகாம் லிங்கன், ஜான் ஆடம்ஸ் உள்ளிட்ட ஜனாதிபதிகளின் வரலாறும் இடம்பெற்றுள்ளது.
ஆப்கன் விவகாரத்தில் மூக்கை நுழைத்தது பற்றியும் பேசப்பட்டுள்ளது. ஈரான் மீது பொருளாதார தடை விதித்தது, பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை கொன்றது போன்ற நிகழ்வுகளும் தெளிவாக உள்ளன. அமெரிக்காவைப் பற்றி அறிய வழிகாட்டும் வகையில் உள்ள நுால்.
– முகில்குமரன்