முழுமுதற் கடவுளான விநாயகரைப் பற்றிய அரிய தகவல்கள் நிரம்பியுள்ள நுால். காரிய சித்தி சுலோகங்களை உள்ளடக்கியுள்ளது.
பிரபஞ்சத்தின் ஓசையும், பிரணவ மந்திரமுமான ‘ஓம்’ என்பதற்கு இறைவடிவம் கொடுத்தனர்; அப்படியே விண்வெளி அறிவியலிலும் விநாயகரை காணச் செய்து ஆச்சரியமூட்டுகிறது. சூரிய குடும்பத்திற்கு அப்பால் நெபுலா திரளை படத்துடன் காட்சிப்படுத்தி, விநாயகர் உருவத்தை காண்பித்து பிரமிப்பு ஏற்படுத்துகிறது.
விநாயகருக்கு உகந்த மலர்கள், அபிேஷக பொருட்கள் நிவேதனப் பொருட்கள் பட்டியலும் இடம்பெற்றுள்ளன. விநாயகரின் அறுபடை வீடுகள், கோவில்களின் தலவரலாறு என, விநாயகர் பற்றிய தொகுப்பாக அமைந்துள்ள நுால்.
– சி.கலாதம்பி