கிரேக்கத்தில் பண்டைய மருத்துவ முறைகளில் இருந்த சிறப்பு கூறுகளை விளக்கும் நுால்.
மருத்துவ வளர்ச்சியால் கிரேக்கத்தில் ஏற்பட்ட பண்பாட்டை அறிய வைக்கிறது. யுனானி மருத்துவத்தில் நோயை குணப்படுத்துதல், தடுத்தல் போன்றவை விளக்கப்பட்டுள்ளன. அளவான உணவால் பல்வகை நோய்களை குணமாக்க முடியும் என உறுதி செய்கிறது.
மூலிகைகள், விலங்கு பொருட்கள், தாதுப் பொருட்களிலிருந்து யுனானி மருந்துகள் செய்யப்படுவதை குறித்து விவரிக்கிறது. கிரேக்கத்தில் மந்திரங்களை நம்பியிருந்த போக்கு ஹிப்போகிரேட்டசுக்குப் பின் மாறியதை கூறுகிறது.
மருத்துவ வளர்ச்சி இல்லாத காலத்தில் நிலவிய மாந்திரீகங்கள் பற்றி பதிவு செய்துள்ளது.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு