தனித்துவமாக கதைகளை பேசும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். புதிய கோணங்களில் கதைக்களங்கள், கிராமத்து சொலவடைகள், ஈர்க்கும் வட்டாரச் சொல்லாடல்கள், எளிய உயிர்கள் மீதான அக்கறை யாவும் பலமாக இருப்பதோடு, வாசிப்பவரை வேடிக்கை பார்க்கச் செய்கிறது.
இல்லாதவனின் இதயம் பெரியது என்ற கருத்தையே வரிந்து பேசுகிறது. சுற்றி நடக்கும் சம்பவங்களும், செய்திகள் வழியாக வந்து சேரும் விஷயங்களும் கதைக்கருக்களாகி இடம் பிடிக்கின்றன. மர நிழலாக, மழைக்கால ஒதுங்குதலாக, எளிய முகங்களில் மின்னும் அன்பாக பெண்கள் மிளிர்கின்றனர். சொல் வழக்குகளும், மனதை அறுக்கும் இறுதிக் காட்சியும் மவுன சாட்சிகளாக நிற்கின்றன. சக உயிரின நேசமே மையம். அதை முழுமையாக தாங்கி வாசிக்கும் பட்டியலில் சேர்கிறது.
– ஊஞ்சல் பிரபு