கற்பனை கலந்த பேண்டசி வகை நாவல். கதாபாத்திரங்கள், நிகழுமிடம், நடக்கும் காலம் யாவும், இது இப்படி இருக்க சாத்தியமில்லை என்ற புரிதலோடு வாசிப்பை துவங்க உதவியாக இருக்கிறது.
பெருந்துயரிலும் தீர்க்கமான ஆயுள் நீட்சிக்கு மூலிகை மருந்து தேடுவதும், அசல் பிரபஞ்சம், மாற்று பிரபஞ்சங்களுக்கு இடையில் வரும் பாத்திரங்களும், மரபணு வளர்சிதை மாற்றங்களும் சுழலும் வடிவமே நாவலின் பேசுபொருள்.
வசீகர நடை உள்ளிழுத்துக் கொள்கிறது. கற்பனை சம்பவங்களை நிஜமென நம்பச் செய்யும் ஜாலமும் சுவாரசியமாக நீள்கிறது. கதாபாத்திரங்கள் கற்பனையாகவே இருந்தாலும், சமூக, கலாசார, கலை இலக்கிய அரசியல் வெளியில் உலவும் நிஜ மனிதர்களை போலவே தெரிகின்றனர்.
சுவாரசியமான வாசிப்புக்கு உகந்த நுால்.
– ஊஞ்சல் பிரபு