வேத காலம் குறித்த கேள்விகளுக்கு ஆதாரப்பூர்வமாக விடை தரும் நுால். எளிய தமிழில் சுருக்கப்பட்ட வடிவமாக வெளிவந்துள்ளது.
தற்காலத்தில் வேதங்கள் பற்றி பல்வேறு தகவல்கள் உலாவுகின்றன. இது குறித்து பல்வேறு விளக்கங்கள் பலராலும் வழங்கப்படுகின்றன. அவற்றில் உள்நோக்கங்களும் உண்டு. எனவே, உண்மை விளக்கத்தை கண்டறிவது கடினம்.
இந்நிலையில், வேத காலம் குறித்த கேள்விகளுக்கு சரியான விளக்கத்தை தருகிறது இந்த புத்தகம். விளக்கங்கள் போதிய ஆதாரத்துடன் உள்ளன. எளிய தமிழ் நடையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எழுதப்பட்ட காலம், அப்போதைய கல்வி அமைப்பு, சமூக பொருளாதார கட்டமைப்பு, வர்ணாசிரம தர்மத்தின் அடிப்படை என பல கேள்விகளுக்கும் விடை தரும் வகையில் உள்ள நுால்.
– ராம்