கோவிலில் தலவிருட்சம் நட்ட காரணம், அவற்றின் மருத்துவக் குணங்களுடன், மனித சமுதாயத்துக்கு தரும் நன்மைகளை திறம்பட விளக்கியுள்ள நுால்.
முக்கிய, 36 கோவில் வரலாறு, விருட்சங்கள், இலை, பட்டை, வேர், காய், பழம் உள்ளிட்ட அங்கம் எந்தெந்த நோயை குணப்படுத்தும் என தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. தும்பி, வெட்பாலை, ஏறழிஞ்சில் போன்ற அறியாத மரங்கள் பல, கோவில்களில் இருப்பதை கண்டறிந்து எழுதியுள்ளது, ஆச்சரியத்தை தருகிறது.
ஒவ்வொரு மரத்தின் தாவரவியல் பெயரும் கொடுக்கப்பட்டுள்ளதால், உயிரியல் படிக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். மரங்களுக்கு உயிருண்டு என்பதை வலியுறுத்தும் நுால்.
– தி.செல்லப்பா