ஒரு விவசாயியின் களத்து மேட்டு கதை. தன் வீட்டு எருமை மாடு கன்று போடும் சுபசகுனத்தில் துவக்கப்பட்டுள்ளது. பிள்ளைகளை வளர்க்க பட்ட பாடு, பஞ்சம் வந்தபோது நடந்தது என்ன என சரளநடை போடுகிறது. தன்பாடே பெரும்பாடாய் இருக்கையில், சின்ன நிலத்தை தங்கைக்கு கொடுக்கும் பக்குவம் விவசாயிக்கு தான் வர முடியும்.
ஓட்டத் தெரியாதவன் போலீஸ்காரர் சைக்கிளை தலையில் சுமந்து செல்வது சிரிக்க வைக்கிறது. வேலையற்ற கொத்தனார், வசதியானவன் ஓட்டு வீட்டை உடைப்பது, பின் ஓடு மாற்றும் வேலை கேட்கிறார். கோவில் திருவிழா வர்ணனை நேரில் பார்ப்பது போல உள்ளது. வறுமை வாட்டிய குடும்பத்தில் பிள்ளைகள் தலை எடுத்ததும் வாழ்க்கை விருட்சமாவதை சொல்கிறது.
– சீத்தலைச் சாத்தன்