காஷ்மீர் முதல் குமரி வரை, 37 நாட்கள் புனித பயணம் செய்த அனுபவங்களை கூறும் நுால். டில்லியில் சார்தாம் யாத்திரை துவங்கி, ஒவ்வொரு கோவில்களாக சென்ற அனுபவம் பக்தியுடன் கூறப்பட்டுள்ளது.
பார்கோட், யமுனோத்ரி, உத்திரகாஷி, யுத்தர் காஷி கங்கோத்ரி, குப்ட காஷி, மானாக் கிராமம், காஷ்மீர், குருஷேத்திரா, வாரணாசி போன்ற இடங்களை கண்முன் நிறுத்துகின்றன. கோவில் வரலாறு, செல்லும் வழியில் கண்ட மனிதர்கள் என, ஒவ்வொன்றையும் விவரிக்கிறது.
பலவகை உணவு, மெய்சிலிர்க்க வைத்த இடங்களை சுவாரசியமாக பகிர்கிறது. பயணத்தில் கடைப்பிடிக்க வேண்டியதை, எதிர்பாராத சம்பவங்கள், அவற்றை சமாளிக்கும் திறன் குறித்து கூறுகிறது. பயண திட்டமிடலுக்கு உதவும் நுால்.
– டி.எஸ்.ராயன்