பிறந்த மண்ணை நேசிக்கும் நினைவுக் குறிப்பு நுால். தலைப்பே தாய்மொழி. தாய்மண் பற்றை புலப்படுத்துகிறது. மற்றவர்களும் அப்படி இருக்க வேண்டும் என்ற நினைப்பைத் தருகிறது.
இலங்கை, திருகோணமலை எல்லையில் சின்னஞ்சிறு கிராமம் ஆனைத் தீவு. வெள்ளப்பெருக்கால் கிராமத்தின் அழிவு என்ற கண்ணீர் கதை நெஞ்சை உருக்குகிறது. பழகிய நண்பர்களின் பட்டியல் நன்றி மறவாத தன்மையை சொல்கிறது.
திருவிழாவில் வில் அம்புடன் முருகப்பெருமானுக்கு காவல் செய்யும் பக்தியை புலப்படுத்துகிறது. சடங்குகள் அனைத்தும் பூரணமாக விளக்கப்பட்டுள்ளது. தொழிலை வைத்து சாதிவாரியாக பிரிந்ததை அழகான பாடலாக்கியுள்ள சொல்லாட்சி படிக்க வேண்டிய ஒன்று.
– சீத்தலைச் சாத்தன்