சிவ புராணம், விஷ்ணு புராணம், கருட புராணம், கந்த புராணம், நாரத புராணம் உள்ளிட்ட 18 வகை புராணங்களை தொகுத்து முன்வைக்கும் நுால். தோற்றுவாய் பற்றி தெரிந்து கொள்ள நுழைவாயிலாக அமைந்துள்ளது.
புராணங்கள் பெரும்பாலும் சிவன், விஷ்ணுவை போற்றுகின்றன. புராணக் கதைகளுக்கே உரித்தான புனைவுகள், சாகசங்கள், மாயைகள், அபூர்வ காட்சிகள் காணக் கிடைக்கின்றன. ஹிந்து சமயத்தை போற்றும் தர்ம நெறி கூறும் கதைகளையும் இணைத்துக் கூறுகிறது.
சமயம் சார்ந்த சடங்கு முறைகள், வழிபாட்டு நடைமுறைகள், திருமண வகைகள், நோன்புகள், தானங்கள் என மரபு வழிமுறைகளை எல்லாம் எடுத்துக் கூறும் வகையில் பெரிய அளவில் தயாரிக்கப்பட்டுள்ள நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு