பெண்ணின் மனம் கல்லா, கனியுமா என்பதை சொல்லும் புது மாதிரியான நாவல் நுால். நடன முத்திரைகள், பாவனைகளை நிருத்தம், நிருத்தியம், அடைவுகள் பற்றி அழகாக தொகுக்கப்பட்டுள்ளது. படிக்கும் போதே நடனம் கற்க வேண்டும் என்ற ஆவலை துாண்டுகிறது. அக்காவின் தோழி வயதில் மூத்தவள் என்றாலும் பெயர் சொல்லி கூப்பிட்ட ஈர்ப்பு, பொருந்தா காதலா என கேட்க வைக்கிறது.
விதவை திருமணம், குழந்தை திருமணம் என விதவிதமான திருப்பங்கள் உடைய கதை ஓட்டம். படிக்கும் போதே திரைப்படமாக்க ஏற்றது என்பதை காட்டுகிறது. பின்னுரை குறிப்பை படித்த போது, இந்த நாவல் கனடா நாட்டில் சிவரஞ்சனி என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது. சுவாரசியம் தரும் நுால்.
– சீத்தலைச்சாத்தன்