தமிழக புலவர்களை ஆதரித்த புரவலர் மற்றும் குறுநில மன்னர் ஆட்சியின் மாண்பை விளக்கும் புத்தகம். பள்ளி மாணவர்கள் அவசியம் படித்து அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள், 30 கட்டுரைகள் உள்ளன.
வணிகர்கள் சொந்த மதத்தில் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தாலும், பிற மத கொள்கைகளில் ஈடுபாடும் காட்டியதால் தான், கடல் கடந்த நாடுகளிலும் வணிகம் செழித்ததாக சொல்லப்பட்டு உள்ளது. மதுரையில் மட்டுமல்ல; உறையூரிலும் தமிழ்ச் சங்கம் இயங்கியதாகக் காட்டுகிறது.
பகைமையை அழிப்பதற்கு பகைவனை அழிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை எடுத்துச் சொல்லியுள்ளனர் புலவர்கள். பழங்காலத்திலும் சிலை திருட்டு நடந்ததை ஒரு வெண்பா சொல்கிறது. வரலாற்று நிகழ்வுகள் உடைய நுால்.
– சீத்தலைச்சாத்தன்