புகழ் பெற்ற கவிஞரின் வாழ்க்கையை கூறும் சுயசரிதை நுால். நினைவுக்குறிப்புகளை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.
வாழ்க்கையின் தேவைக்கேற்ப இன்ப துன்பங்கள், எல்லா மனிதருக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கின்றன. ஆனால், வாழ்க்கை நிகழ்ச்சிகளும், அவற்றை சாத்தியமாக்கும் சந்தர்ப்பங்களும், ஒவ்வொரு மனிதனுக்கும் வேறு வேறாக இருக்கின்றன என்ற பார்வையை முன் வைத்துள்ளது.
வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஒழுங்கமைத்து, சுவாரசியம் குன்றாமல் கதை போல் தொகுக்கப்பட்டுள்ளது. சிறிய தலைப்புகளின் கீழ் அமைந்த நிகழ்வுகளை அலுப்பு தட்டாமல் வாசிக்க முடிகிறது. வாழ்ந்த காலக்கட்டத்தின் நடைமுறை, சம்பிரதாயங்களை ஆங்காங்கே காண முடிகிறது. பிரபல கவிஞரின் வாழ்க்கை வரலாற்று நுால்.
– மதி