வாணி டீச்சரின் நியாயமான கோபத்தை, குழந்தையின் தாய் சமாளிப்பது கதையாக்கப்பட்டுள்ளது. நியாயத்திற்கே நியாயம் சொல்ல முடியும் என தெளிவாக்கும் வகையிலான தொகுப்பு நுால்.
மொத்தம், 25 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலும் இளமை துள்ளும் காதல் கதைகள் தான்; வரிக்கு வரி தித்திக்கின்றன. ஒன்றை படித்து முடித்தவுடன் அடுத்து நகர்ந்து போக முடியவில்லை; படித்த நிகழ்ச்சிகளை பாத்திரங்களை அசை போட வைக்கின்றன.
பொய்களின் தலைவி தான், ‘உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல’ என்ற சிறுகதை நாயகி. இது போன்ற சமயோசித புத்தி இளம் பெண்களுக்கு மிக அவசியம். கெட்டுப் போனவள் என விட்டுப் போன காதலனுக்கு சாட்டையடி கிடைக்கிறது. தார்மீக கோபத்தை காட்டும் சிறுகதை நுால்.
– சீத்தலைச்சாத்தன்