குறளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால்.
முதல் நான்கு தலைப்புகளில் விலங்குகள், பறவைகள், ஊர்வன போன்றவை குறித்து வள்ளுவர் கூறியுள்ள கருத்துகள் விவரித்து கூறப்பட்டுள்ளன. குறிப்பாக, விலங்குகளை பற்றிய திருவள்ளுவரின் குறளுக்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கங்கள் தெளிவு. பிச்சை எடுத்து பிழைப்பது கேவலமானது; தானம் அளிப்பது சிறந்தது என்பதற்கான விளக்கம், குலம் பற்றிய பார்வை உள்ளிட்ட கருத்துகள் எளிய நடையில் உள்ளன.
ஜாதி கொடுமை குறித்து, ஒரு பிச்சைக்காரனை உதாரணம் காட்டி கூறப்பட்டுள்ள கருத்து சிந்திக்க வைக்கிறது. தமிழகத்தில் தோன்றிய வள்ளுவருக்கு, கேரள மாநிலத்தில் 42 இடங்களில் கோவில் அமைத்துள்ளது யோசிக்க வைக்கிறது. கடவுளாக வழிபடுவதும் ஆச்சரியம் அளிக்கிறது.
– முகில்குமரன்