கொரோனா தொற்று நோய் எங்கு எப்படி தோன்றியது என்று விளக்கும் நுால். துவக்கம், வளர்ச்சி, உலக மக்களை தாக்கிய விதம் பற்றி விவரிக்கிறது. அனைத்துத் தகவல்களும் தரப்பட்டுள்ளன.
வள்ளுவரின் மருத்துவம் சார்ந்த குறளும், பிற இலக்கியங்களில் உள்ள மருத்துவ கருத்துகளும் இடம் பெற்றுள்ளன. கொரோனாவின் கொடுமையையும், அதை நீக்க தமிழக அரசு மேற்கொண்ட பணிகளையும் புகைப்படத்துடன் விளக்குகிறது.
கொரோனா காலத்தின் நினைவலைகள் நெஞ்சில் நிழலாடுகின்றன. உணவு முறை, தனிமையில் இருத்தல் போன்ற கட்டுப்பாடுகளும் கூறப்பட்டுள்ளன. மருத்துவம் தொடர்பான திட்டங்களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவம் தொடர்பான அரசின் நலத் திட்டங்களை தெரிந்து கொள்வதற்கு பெரிதும் உதவும் வகையில் அமைந்துள்ள நுால்.
– பேராசிரியர் ரா.நாராயணன்