நிறைவு தரும் ஆன்மிக செய்திகளுடன் மலர்ந்துள்ளது அமுதசுரபி தீபாவளி மலர். வாழ்வியல், கலை, மருத்துவம், விளையாட்டு, தமிழ் வளர்க்கும் அமைப்புகள், பழைய இலக்கியம், தற்கால தமிழ் இலக்கியத்தில் சிறுகதை, நாடகம், கவிதை, கட்டுரை என பல்சுவையுடன் உள்ளது.
முதல் வணக்கம் பிள்ளையாருக்கு ஏன்? என்ற தலைப்பில் உள்ள கட்டுரையில் ஆன்மிக மணம் கமழ்கிறது. உயர்கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி.,யில் சுலபமாக கற்கும் வழிமுறைகளை விளக்கும் இயக்குனரின் பேட்டி அறிவூட்டுகிறது.
நடிகர் டில்லி கணேஷின் தீபாவளி அனுபவம் கலகலப்பாக சொல்லப்பட்டுள்ளது. பரதநாட்டிய கலைஞர் பாலசரஸ்வதி மற்றும் நடனக்கலை பற்றிய கட்டுரைகள் தனித்துவம் நிறைந்துள்ளன. பல்சுவையும் நிறைந்து இனிமை சேர்க்கும் தீபாவளி மலர்.
– கவி