சினிமா பின்னணியில் எழுதப்பட்ட குறுநாவல் நுால்.
பிரபல நடிகை மித்யா சந்தோஷை காதலிக்கிறாள். காதலுக்கு இடையூறாக கொலைகள் மர்மமான முறையில் நடந்தேறுகின்றன. அந்த அதிர்ச்சிகரமான சம்பவங்களை நடிகை எப்படி எதிர் கொள்கிறாள், அவளுக்கு உறுதுணையாக இருக்கும் மேனேஜரின் பங்களிப்பு எப்படி இருக்கிறது, பிரச்னை சரிசெய்ய மித்யா எடுக்கும் முடிவுகள், சந்தோஷின் நிலைப்பாடு என ஆறு அத்தியாயங்களில் சுவாரசியமாக நீள்கிறது.
காதலர்களுக்கு இடையிலான நெருக்கமும், ரம்யமான உரையாடலும், சம்பவங்களின் நகர்வும் விறுவிறுப்பை இனிமையுடன் கூட்டுகிறது. ஒன்றுடன் ஒன்றாக தொடர்ந்து நடக்கும் கொலைகளும், ப்ளாக் மெயிலும் எதிர்பார்ப்பை எகிறச் செய்கின்றன. விறுவிறுப்பான மர்ம நாவல் சுலபமாக வசீகரிக்கிறது.
– ஊஞ்சல் பிரபு