படைப்பாக்கம், வடிவத்தில் மாய யதார்த்தத்தை கொண்டு அழகிய சித்திரங்களாக பகடியை வெளிப்படுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
அழைப்பு, தேர், வீடு கதைகளில் நன்கு அறிமுகமாகிய வாழ்வில் சந்தித்த மாந்தர்களையும், சாமானியர் அனுபவங்களையும் வண்ணச் சித்திரங்களாக காட்டுகிறது. பண்பாட்டு கூறுகளை புனைவுலகிற்கு இட்டுச் செல்வது தனித்துவமாக இருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் உயிரை விட்டவன், ரட்சகன் கதைகள் அன்றாட ஒட்டுமொத்த நிகழ்வில் இருந்து கீற்றாய் நீட்டி அழகியலை வெளிப்படுத்துகின்றன.
தொன்மம், முன்னோர் எல்லாம் யதார்த்தத்தில் எவ்வாறு பொருள் கொள்ளும் என அறிய வருவது தனித்துவமிக்கதாக இருக்கிறது. சுவாரசியமான நடையும், மாய யதார்த்த வடிவமும் பார்க்க துாண்டுகிறது.
– ஊஞ்சல் பிரபு