மணிப்பூர் இனக்கலவர பின்னணியை பதிவு செய்துள்ள நுால். மாநில வரலாற்றையும் அறியத் தருகிறது.
கலவரத்தின் தொடக்கப் புள்ளியாக நீதிமன்ற தீர்ப்பைச் சுட்டிக்காட்டுகிறது. அதன் விளைவும், கலவரச் சூழலும் நிரல்பட விளக்கப்பட்டு உள்ளது.
மெய்டி, கூகி பழங்குடிகளிடையே நடந்த ஆயுத மோதல், வன்முறைகள், சூறையாடல்கள், பேரழிவுகள், படுகொலைகள், உயிரிழப்புகள், பொருளாதார இழப்புகளை முன்வைத்து அலசுகிறது.
மணிப்பூரில் தொடர்ந்து நடந்து வரும் இனமோதல்களை அறியச் செய்கிறது. நாகரிக வளர்ச்சிகளைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. மணிப்பூர் பரப்புகளில் நிலவும் போதைப்பொருள் பற்றி தெளிவு தருகிறது. மணிப்பூர் வரலாற்றை முன்வைக்கும் ஆவண நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு