மாறுபட்ட பாணியில் எழுதப்பட்ட காட்சி நுால். சிறுகதை கருவை நாடக வடிவில் மாற்றியிருப்பது புதுமையாக இருக்கிறது.
நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டிருப்பது உண்மைக்கு நெருக்கமாக இருக்கிறது. அதுவே கதையோடு ஒன்றி போகச் செய்கிறது. சினிமா மீதான தீராத ஆசையில் தனித்துவ பாணியில் திரைக்கதை வசன வடிவில், 71 காட்சிகளாக உள்ளன.
கதை சொல்லும் முறை மாறி மாறி எதிர்பட்டாலும் நகர்வு சுவாரசியமாக இருக்கிறது. வர்ணனையும், கேமரா கோண அசைவுகளும் சொல்லப்பட்டிருப்பது வலு சேர்க்கிறது. பெண் கதாபாத்திரங்களின் செயல்பாடு நெருடலுடன் உள்ளது. அட்டைப்பட ஓவியம் வித்தியாசமான சித்தரிப்புடன் உள்ளதால், மாறுபட்ட எண்ணத்தை ஏற்படுத்துகிறது. காட்சி வடிவிலான கதை சொல்லல் முறையை விரும்புவோர் படிக்க வேண்டிய நுால்.
-– ஊஞ்சல் பிரபு