உணவாகும் கீரை பற்றி சுவாரசிய தகவல்களை உரைக்கும் நுால். 45 வகை கீரைகளை உணவாக்குவதால் ஏற்படும் நன்மைகளை விவரிக்கிறது.
காசினிக்கீரையில் துவங்குகிறது. உரையாடல் போல் அது எங்கிருக்கும், எவ்வாறு பயன்படும், எப்படி அறுவடை செய்யலாம் போன்ற விபரங்களை தெரிவிக்கிறது. மிகவும் பொருள் பொதிந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது. கீரைகளை உணவாக்கினால் எவ்வாறு எல்லாம் பயன்தரும் என்பதும் தரப்பட்டுள்ளது.
சில கீரைகளின் பலன்களுக்கு, பழமொழி எடுத்துக்காட்டாக தரப்பட்டுள்ளது. கீரை சாகுபடி நுட்பமும் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. கீரைகள் மட்டுமின்றி அவற்றின் பாகங்கள் எப்படி எல்லாம் பயன்தரும் என்ற விபரமும் விளக்கப்பட்டுள்ளது. கீரை உணவின் சிறப்பை புரிய வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுால்.
– ராம்