வசியக்கலையான ‘ஹிப்னாடிசம் மெஸ்மரிசம்’ பற்றி கூறும் நுால்.
ஒளிப்பாய்ச்சலால் மனதுக்குள் நுழையும் கலையை விவரிக்கிறது. ஒரு உத்தரவில் அடுத்தவரை பணிய வைக்கிறது. இந்த கலையை பயன்படுத்திய ராணி, 11 பேரை விரும்பியதாக செய்தி உள்ளது. புருவங்களுக்கு இடைப்பட்ட பகுதியை ஆழ்ந்து பார்த்து மயக்க நிலையில் வைப்பது பற்றி கூறுகிறது. பெண்கள் நெற்றியில் திலகம் இடுவதும், ஆண்கள் திருநீறு பூசுவதும் குறித்த தகவல்களை பகிர்கிறது.
தாம்பத்திய மகிழ்ச்சி என்பது உடல் சம்பந்தப்பட்டது அல்ல; மனம் சம்பந்தப்பட்டது என அறிவூட்டுகிறது. வசியக் கலையால் மிருகங்களை செயலிழக்க வைக்கலாம் என்கிறது. பார்வை இழந்தவரை மேடம் கியூரி மணந்தது பற்றியும் கூறுகிறது.
– சீத்தலைச் சாத்தன்