வரலாற்றில் திருவள்ளூர் மாவட்ட சிறப்பியல்புகளை தொகுத்து தரும் நுால். பத்து தலைப்புகளில் செய்திகள் இடம் பெற்றுள்ளன.
மாவட்டம் புதிதாக உதயமானதில் துவங்குகிறது. அதற்கு முந்தைய வரலாற்று தனித்துவத்துடன் தரப்பட்டுள்ளது. நிலப்பரப்பின் சிறப்பு, புவியியல் அமைப்பு, ஆட்சி அதிகார முறைகள் குறித்து தனித்தனியாக தகவல்களை தருகிறது. சமூக பொருளாதார நிலை பற்றிய குறிப்புகளும் உள்ளன.
சமயங்களின் பரவல், கவின் கலை வளர்ச்சி, வரலாற்று ஆதாரங்களாக விளங்கும் கல்வெட்டு, செப்பேடு செய்திகள் கூறப்பட்டுள்ளன. தொன்மை காலத்தில் வாழ்ந்த சான்றோர், வரலாற்றில் சிறப்பு பெற்றுள்ள பகுதிகள், சமகாலத்து நிகழ்வுகளுடன் தரப்பட்டுள்ளன. உள்ளூர் வரலாற்று ஆவண நுால்.
– மதி