நான் இந்த விஜயநகரத்தின் பேரரசன்

விலைரூ.125

ஆசிரியர் : கே.சித்தார்த்தன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
நாடகத்தில் இரண்டு வகை உண்டு. நடிப்பதற்கு ஏற்றது; படிப்பதற்கு ஏற்றது. இது, நடிப்பதற்கு ஏற்ப எழுதப்பட்டுள்ள நுால். படிப்பதற்கும் சுவையாக இருக்கிறது. கதையின் அடித்தளமாக ஹிந்து – முஸ்லிம் காதல் காட்டப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல, ராஜ துரோகம், சினேகித சிறப்பு மற்றும் பெற்ற மகள், வளர்ப்பு மகளுக்கு இடையிலான வித்தியாசங்கள் பல கோணங்களில் காட்டப்பட்டுள்ளன.

‘நிறம் மாறினால் தான் பச்சோந்தி, மாறவில்லை என்றால் வெறும் ஓணான் தான்; தட்டப்படாத தங்கமும், உழப்படாத நிலமும் உருப்படாது’ என்பது போன்ற வசனங்களும் உண்டு. காதல் அடித்தளமுள்ள கதை என்றாலே முக்கோணமாக படைப்பது இயல்பானது தான். அது, அசாதாரணமாக காட்டப்பட்டுள்ளது. பலர் மரணம் முடிவாக உள்ள நாடகம்.

– சீத்தலைச்சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us