குடும்பத்தில் செலவைக் குறைத்து, சேமிப்பை பெருக்கும் முறைகளை கற்றுத்தரும் நுால். அத்தியாவசியத் தேவையை வரையறுத்து தெளிவாக வழிகாட்டுகிறது.
நிதி மேலாண் அணுகுமுறையை, குடும்பத்தில் பயன்படுத்த அறிவுரை தருகிறது. எளிய எடுத்துக்காட்டுகள் வழியாக நிதி நுட்பங்களை புரிய வைக்கிறது. அத்தியாவசியப் பொருட்களுக்கு உரிய முக்கியத்துவம், எதையும் தேவையா என பலமுறை யோசித்து முடிவெடுக்கும் மனோபாவத்தை வளர்ப்பதற்கு அறிவுரைக்கிறது.
தேவையற்றதை வாங்கிக் குவிப்பதை தவிர்த்து மீட்சிக்கு வழிகாட்டுகிறது. குடும்பத்தில் மாதாந்திர வரவு, செலவு கணக்கு போடும்போது, கவனிக்க வேண்டியவற்றை எடுத்துரைக்கிறது. சிக்கனமாக வாழ்ந்து பொருள் சேர்க்கும் வழிமுறைகளை கற்றுத்தரும் வகையிலான நுால்.
– மதி