ஆங்கிலேயர் வந்தபின் தான் இந்தியா கல்வி வளர்ச்சி பெற்றது; பொருளாதாரம் சீரானது; அறிவியல் அறிவு கிடைத்தது என்ற கூற்று மிகவும் தவறானது என தெளிவாக விளக்கும் நுால்.
நம் நாட்டில் பாரம்பரியக் கல்வி வரலாறு எப்படி எல்லாம் திரிக்கப்பட்டிருக்கிறது என உரைக்கிறது. இங்கு பயன்படுத்தப்பட்ட கலப்பை, ஐஸ் மற்றும் எக்கு தயாரிப்பு தொழில் நுட்பம், உறுதியாக கட்டடம் அமைக்கும் முறை, வேதிப்பொருட்களின் பயன்பாடு பற்றிய செய்திகளை விவரிக்கிறது.
பண்டைய இந்தியாவில் சிறந்து விளங்கிய வான சாஸ்திரம், சூரிய சந்திர நகர்வுகள், கிரகணங்களை துல்லியமாகக் கணிப்பதில் பெருமையுடன் விளங்கிய நம் அறிவுப் புதையலை விளக்கும் நுால்.
– இளங்கோவன்