உதயகீதம் சினிமா வெளியான காலத்தில் வெற்றி வாகை சூடிய, 100 திரைப்படங்கள் பற்றி குறிப்புகள் இடம் பெற்றுள்ள நுால். கொரோனா தொற்று காலத்தில் நினைவுகளை அசை போட்டு எழுதப்பட்டுள்ளது.
பழைய தமிழ் திரைப்படங்களை விரிவான குறிப்புகளுடன் தொகுத்து தருகிறது. குறிப்பிட்ட படம் வெளியான ஆண்டு, அதில் முக்கிய நடிகர்கள், இயக்குனர், இசையமைப்பாளர், மனம் கவர்ந்த பாடல்கள் என முழுமையாக தொகுக்கப்பட்டுள்ளது.
திரைப்படத் துறையில் பணிபுரிவோர், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு உதவும் வகையில் உள்ளது. திரைப்படம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்கிறது. திரைப்படங்களின் வரலாற்றை சொல்லும் நுால்.
– தி.செல்லப்பா