வரலாறு மற்றும் வளர்ச்சி செய்திகளை உள்ளடக்கிய நுால். சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் பிரியும் முன் இருந்த நிலையை விளக்குகிறது.
புத்தகம் இரண்டு பகுதிகளை உடையது. முதலில் மாவட்ட தோற்றம், வரலாறு, மக்கள் நிலை, வேளாண் விபரங்கள், சமய நிறுவனங்கள், அப்போதைய போக்குவரத்து வசதி, வணிகம், தொழில் வளர்ச்சி, விடுதலை போராட்ட பங்கேற்பு, கல்வி, கலைகள் நிலை குறித்து விரிவாக தரப்பட்டுள்ளது.
இரண்டாம் பகுதியில் முக்கிய ஊர்களை பற்றி தொகுத்து தருகிறது. சிவகங்கை, விருதுநகர் மாவட்டங் கள் பிரிக்கப்படும் முன் இருந்த தாலுகாக்கள் பற்றி விரிவாக தகவல்களை தருகிறது. நகர வளர்ச்சிநிலை பற்றிய குறிப்பும் உள்ளது. பிற்சேர்க்கையாக, மாவட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளும் தொகுக்கப்பட்டுள்ள நுால்.
– ராம்