தமிழறிஞர்களை எளிதாக நினைவில் பதிக்க ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுால். கேள்வி – பதில்களாக தொகுத்து தகவல்கள் தரப்பட்டுள்ளன.
தமிழுக்கு உழைத்த பெருமக்கள் ஏராளம். அதில், நுாறு பேரை தேர்ந்தெடுத்து அறிமுகம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழறிஞர் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள், தமிழ் மொழிக்கு அவர்கள் ஆற்றிய தொண்டு தொகுத்து தரப்பட்டுள்ளது.
அகத்தியர் துவங்கி, கால்டுவெல் வரை அறிஞர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஒவ்வொருவரையும் நினைவில் கொள்ளத்தக்க வகையில் எளிய கேள்விகள் அமைத்து, பதில்கள் தரப்பட்டுள்ளன. போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோருக்கும் உதவும். தமிழறிஞர்களின் வாழ்வையும், பணிகளையும் அறியத் தரும் நுால்.
– ராம்